Sunday, September 9, 2012

அக்பர் - ஒரு மாமன்னனின் சரித்திரம்

அத்தியாயம் - 1 



அக்பரின் பிறப்பு 


ஜலாளுதின் அக்பர் - இவர் பிறந்தது அக்டோபர் 14  1542 . முகலாயப் பேரரசின் மூன்றாவது மாமன்னர். 

ஆம். இவரை சாதரணமாக மன்னர் என்று அழைத்து விட  முடியாது. மாமன்னர் என்று அழிப்பதே சற்று குறைவான புகழாரம்தான். இவர் மத்திய ஆசியா கண்ட மாபெரும் பேரரசர். பதினான்காம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் பிரளயத்தை ஏற்படுத்திய கொடுங்கோலன் தைமுரின் வழி வந்த செங்கோளர். இவரது பெயரே இவரது பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்தது. 

1539 ஆம் ஆண்டு அக்பரின் தந்தை ஹுமாயுன் ஷேர் ஷா என்ற மன்னனால் இந்தியாவை விட்டு துரததிடிக்கபட்டார். தனது சில ஆதரவாளர்களுடன் ராஜபுத்னா ( இன்றைய ராஜஸ்தான்) பாலைவனத்தில் தஞ்சம் புகுந்தார் ஹுமாயூன். செல்லும் வழியில் ஹமிதா பேகம் என்ற பெண்ணை மனம் புரிந்தார். 

Humayun
ஹமீதா பானு பேகம் தனது பதிமூன்றாவது வயதில் ஹுமாயூனை சந்தித்தார்.

டில்லியை விட்டு துரத்தப்பட்ட ஹுமாயுன் தனது சகோதரர் மிர்சா ஹிந்டளுடன் (பாபரின் கடைசி மகன்) தங்கி இருந்தார். ஹமீதா பானுவின் தந்தை மிர்சா ஹிந்டாளுக்கு உற்ற நண்பர். 

இதன் காரணமாக ஹுமாயுன் ஹமீதா பானுவுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஹுமாயுனை சந்திப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் தனது தந்தையின் வற்புறுத்தலால் அவர் ஹுமாயுனை மணக்க சம்மதித்தார்.







Hameeda & Humayun
ஹமீதா தன இயற்றிய  'ஹுமாயுனா ' என்ற புத்தகத்தில் தனது என்னனங்களை இவ்வாறு பதிவு செய்கிறார் - 'நான் யாரை வேண்டுமானாலும் மணக்க தயார். அனால் அந்த ஆணை தொட நீளும் ஏன் கரங்கள் அவர் தோலை  தொடவும் அவரது கீழங்கியை (ஸ்கிர்ட்) தொடமுடியமலும் இருக்க வேண்டும்.' 




அவர் தனது கணவர் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டும் என்பதையே அவ்வாறு கூறியிருந்தார். 1541 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களது திருமணம் இனிதே நடந்தது. ஹமீதா ஹுமாயூனின் இளைய மனைவி ஆனார். ஆம். இவர் ஹுமாயூனுக்கு இரண்டாம் மனைவி (ஹுமாயூனின் முதல் மனைவி ஹாஜி பேகம்).


Umarkot - Akbar's birth place
ஹுமாயுனை மணந்த ஹமீதா தனது கணவருடன் பாலைவனத்தில் தனது பயணத்தை தொடங்கினர். ஓராண்டு பயணத்தின் பிறகு அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் உமர்கோட் என்ற நகரை அடைந்தனர். அதுவும் ஒரு பாலைவன நகரமே. ராணா பிரசாத் என்ற இந்து ராஜபுத்திர மன்னர் அந்த பிரதேசத்தை ஆண்டு வந்தார். ராணா ஹுமாயூன் ஹமீதா தம்பதிக்கு அடைக்கலம் கொடுத்தார். நிறை மாத கர்பினியை இருந்த ஹமீதா 1542  ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை தானே செதுக்கிய அக்பர்  என்ற பேரரசனை இனிதே ஈன்றெடுத்தார். 

அக்பர் பிறப்பதற்கு முன்பு ஹுமாயூன் லாகூர் நகரில் தங்கி இருந்த போது அவரது கனவில் கேட்ட அசரீரி அவரது மகனின் பெயர் ஜலாலுதீன் அக்பர் என உரைத்தது.  உலகை தன் காலடியில் கட்டிபோடும் திறமை கொண்ட ஒரு பேரரசனின் வரலாறு அன்று ஆரவாரத்துடன் தொடங்கியது! முகலாய பேரரசு தனது பொற்காலத்தை கான ஆயிரம் கண்கொண்டு காத்திருந்தது!!

அக்பர் பிறந்த போது அவரது தந்தை ஹுமாயூன் அவர் அருகில் இல்லை. ஹுமாயூன் அப்பொழுது போர்களத்தில் தனது எதிரிகளுடன் போராடிக்கொண்டிருந்தார். போர்களத்தின் நடுவில் இருந்த ஹுமாயூனை காண உமர்கொட்டில் இருந்து ஒரு ஒற்றன் வந்திருந்தான். 

அவன் மூலம் தனது மகனின் பிறப்பை அறிந்து கொண்ட ஹுமாயூன் பேருவகை கொண்டார். இந்திய மாகண்டதினை ஆளும் தனது கனவு தனது மகன் மூலம் நிறைவேறவேண்டும் எனும் ஆவலும்  கொண்டார். 

விதியின் வசத்தால் அன்று அந்த அற்புத செய்தியை தாங்கி வந்து தன்னிடம் தெரிவித்த ஒற்றனுக்கு கொடுக்க ஒரு பரிசும் இல்லாத ஹுமாயூன் தன்னிடம் இருந்த ரோஜா மலரின் வாசனை திரவிதை கொடுத்து, இதன் வாசம் காற்றை எப்படி வசீகரமாய் தழுவுகிறதோ அதே போல் நாளை ஏன் மகனை இந்த  தேசத்தின்  வரலாறு தழுவும் என்று வாய் மொழிந்தர். வரலாறு அதை அப்படியே மெய்ப்பித்து காட்டியது. 


மேலும் உத்வேகத்துடன் போராடிய ஹுமாயூன் போரின் முடிவில் ஜூன் நகரை கைப்பாற்றினார். அப்போது ஹமீதா அகபருடன் 12 நாள் மிக நெடிய  நடை பயணத்திற்கு பிறகு தனது கணவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். ஒன்றரை மாத குழந்தையாக  இருந்த அக்பருக்கு ஹுமாயூன் ஜலாலுதீன் அக்பர் என்று பெயரிட்டார்.  டில்லியை இழந்து நாடோடியாக காலம் கழித்துக்கொண்டிருந்த ஹுமாயூன் தனது வேட்கையை தொடர்ந்தார். அடுத்த போர்களத்துக்கு தன்னைத்தானே செலுத்தினர். ஹமீதா தனது கணவரின் காலடியை தொடர்ந்தார். 

குழந்தை பருவம் 


காலத்தின் கட்டாயமாய் ஹுமாயூன் மேற்கொண்ட பயணத்தில் ஹமீதா தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். ஹுமாயூனின் கடைசி தம்பி அஸ்காரி ஹுமாயூனை தேடிபிடித்து கொலைசெய்ய படைகளுடன் புறப்பட்டார். இதை அறிந்த ஹுமாயூன் மீண்டும் தனது ஓட்டத்தை தொடர்ந்தார். அவரது ஆதரவாளர்களும் கணிசமாக குறைந்திருந்தனர். அக்பரை தன்னுடன் கூடிசெல்வதா அல்லது காவலர்களுடன் விட்டுச்செல்வதா என்ற மனப்போரடத்தில் மூழ்கிய ஹுமாயூன் ஒரு ஆபத்தான  முடிவெடுத்தார். 

தான் தப்பிச்செல்லவிருக்கும் பாலைவனப்பகுதிகள் மிகவும் கொடூரமானவை. கடும் பனிப்பொழிவும் கடுமையான வெயிலும் நிச்சயம் அக்பருடைய உயிருக்கு உத்தரவாதம் இன்றி செய்துவிடும். எனவே அவரை தன்னுடன் கூட்டிச்செல்வது அவ்வளவு உசித்தமாக படவில்லை ஹுமாயூனுக்கு. மறுமுனை தன்னை கொல்லத்துடிக்கும் உடன்பிறப்பு. ஆயினும் ஹுமாயூனின் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தது. என்னதான் தன்னை கொள்ள தன தம்பி துடித்தாலும் தங்களின் தந்தை பாபரின் அமைதியும் சந்தமும் கொண்ட கலையம்சத்துடன் பிறந்திருக்கும் அக்பரின் பிஞ்சு முகத்தை  கண்டால் அவரது மனம் நிச்சயம் இலகும், அக்பரை கொல்ல மாட்டார்   தனது தம்பி என்பதே அந்த நம்பிக்கை.  

அக்பரை தனது ஒரு சில ஆதரவாளர்களுடன் அங்கேயே ஒரு சிறிய கூடாரத்தில் விட்டுவிட்டு தன மனைவியுடன் ஹுமாயூன் தப்பிச்சென்றார். அவ்வாறு தப்பி ஓடிய ஹுமாயூன் தஞ்சம் புகுந்தது பெர்சியாவில்.  தனது பெற்றோர் பெர்சியாவில் இருக்க அக்பர் ராவே நகரில் உள்ள முகுண்ட்பூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார். 

சில நாட்களில் அவரது தம்பி  அஸ்காரி அந்த கூடாரத்தை கண்டுபிடித்து வந்து சேர்ந்தார். உள்ளே சென்று தேடிய வீரர்கள் ஹுமாயூன் தப்பி ஓடிவிட்டதையும் அக்பர் மட்டுமே சில செவிலியருடன் இருப்பதையும் வந்து கூறினர். கொலைவெறியுடன் உள்ளே புகுந்த  அஸ்காரி அக்பரின் முகத்தை கண்டவுடன் மனம் இறங்கினார். எங்கிருந்தலும் ஹுமாயூனை கண்டுபிடித்து கொல்லுமாறு உத்தரவிட்ட  அஸ்காரி, அக்பரை  தன்னுடன் ஆப்கான் அழைத்து செல்வதாக கூறினார்.  அன்று முதல் அக்பர் ஆப்கானிஸ்தானில் தனது சித்தப்பாவுடன் வளர்ந்தார். 

அக்பருக்கு மூன்று வயது இருக்கும்போது ஹுமாயுமுடன் சென்றிருந்த அவரது தாய் ஹமீதா அக்பரிடம் மீண்டும் வந்தார். அப்போதொழுது அவர் இன்னொரு குழந்தையையும் ஈன்றிருந்தர். அக்பருக்கு ஒரு தங்கை பிறந்திருந்தால். மூன்று வயதே ஆன அக்பரால் தனது தாயை பல  செவிளிப்பெண்களிடையே துல்லியமாக கண்டறிய முடிந்ததாக 'அக்பர் நாமா' என்ற அவரது சுய சரிதை கூறுகிறது.

தனது இளம் வயதில் அக்பர் சண்டை, வில் வித்தை, வாள் வித்தை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம், வன வேட்டை ஆகியவற்றில் தனது நேரத்தை செலவளித்தார். அனால் படிக்கவும் எழுதவும் அவர் கற்றுக்கொள்ள வில்லை. பெற்றோரை பிரிந்து பாதுகாவலர்கள் மேற்பார்வையில் வளர்ந்த அக்பரின் உள்ளத்தில் போராடும் குணமும் அயராத முயற்சியும் இயல்பாகவே இருந்தது. தனது தந்தை கண்ட கனவை நனவாக்கும் பாதையில் தன்னை அறியாமலேயே அவர் வேகமாக முன்னேரிக்கொண்டிருந்தார். வீரமும் விவேகமுன் அவரிடம் அடிமைகளாயின. எதையும் கூர்ந்து ஆராயும் குணமும் தீர விசாரிக்கும் அறிவும் அவரை அமைதியாய் ஆட்கொண்டன. 

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அக்பர் வந்த சந்தையில் சற்று பின்னோக்கி சென்று அவரது முன்னோர்களை பார்த்தால் பார்த்தல், நாம் காண்பது தைமூர், செங்கிஸ்கான் மற்றும் பாபர் போன்றோர். 

1548 ஆம் ஆண்டு அக்பர் தனது தாய் தந்தை மற்றும் தங்கையுடன் காபுலுக்கு பயணித்தார். 

இதற்கிடையே ஹுமாயூனை துரத்திய ஷேர் ஷாஹ் சூரி 1545 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஷேர் ஷாஹ் சூரி (1540 - 1545)


Sher Shah Suri

பாரித் கான் என்ற இயற்பெயர் கொண்ட ஷேர் ஷாஹ் சூரி பிறப்பால் ஒரு ஆப்கானியர். 

பாலுல் கான் லோடி என்பவரால் டில்லியில் தோற்றுவிக்கப்பட்ட லோடி சாம்ராஜ்யத்தில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தவர்.  இவரது இளம் வயதில் பாரகன என்ற கிராமம் இவரது கட்டுப்பாட்டில் விடப்பட்டது. 

அனால் தனது தந்தையுடன் ஏற்பட்ட கருது வேறுபட்டால் அவர் தனது ஊரை விட்டு ஓடிவிட்டார். 

ஊரை விட்டு ஓடிய பாரித் கான் ஜான்பூர் கவர்னர் ஜமால் கானிடம் தஞ்சம் புகுந்தார். இதை அறிந்த  அவரது தந்தை ஜமால் கானுக்கு ஒரு கடிதம் எழுதினர். 

அதில் ' பாரித் கான் எனது கண்டிப்பான வளர்ப்பால் வெறுப்படைந்து வீட்டை விட்டு சென்றுவிட்டான். அவன் உங்களுடன் இருப்பதை அறிகிறேன். கருணை கூர்ந்து அவனை இங்கே திருப்பி அனுப்பிவிடுங்கள். அவனுக்கு சிறந்த முறையில் கல்வி புகட்ட நான் தீர்மானித்திருக்கிறேன். அவன் வர மறுத்தால் தாங்கள் தயைகூர்ந்து தங்களிடம் உள்ள சான்றோர்கள் மூலம்  அவனுக்கு நல்லிணக்கமும் பணிவும் கற்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.' என்று எழுதி இருந்தார்.

இதை படித்த ஜமால் கான் பாரித் கானை தனது தந்தையிடம் திரும்ப செல்லும்படி கூறினார். அனால் அதை மறுத்த பாரித் கான் 'நாள் கல்வி கற்க வேண்டும் என்பதே எனது தந்தையின் விருப்பமானால் அதை நான் இங்கேயே கற்கிறேன்' என்று பதிலளித்தார். 

பின்னர் பாரித் கான் பீகாரை ஆண்ட கவர்னர் பாஹர் கான் என்பவரின் படையில் படைத்தலைவராக பணிபுரிந்தார். இவரது வீரத்தையும் போர் திறமையும் கண்ட பாஹர் கான் இவருக்கு ஷேர் கான் (புலி ராஜா) என்று பட்டபெயர் சூட்டினர். இதுவே பின்னலில் அவர் அறியப்படும் பெயரானது. 

பாஹர் கானின் மறைவுக்கு பிறகு ஜலான் கானின் சார்பாக பீகாரின் பொறுப்பை ஏற்றார். அனால் நாளடைவில் இவரது நடவடிக்கைகள் தன்னிச்சையாக இருந்ததை அடுத்தும் இவர் செல்வாக்கு உயர்வதை கண்டும் விழித்துக்கொண்ட ஜலால் கான் பெங்காலை  ஆண்ட கியாசுதீன் மஹ்முத் ஷாஹ் என்பவரின் உதவியை நாடினர். 

கியாசுதீன், இப்ராகிம் கான் என்பவர் தலைமையில் ஒரு படையை பீகாரை நோக்கி அனுப்பினர். சுரஜ்கர்க் என்ற இடத்தில பெரும் யுத்தம் நடந்தது. ஷேர் கானின் படை கியாசுடீனின் படையை வென்று பீகாரில் மேலும் அழுத்தமாய் காலூன்றியது. சில வருண்டங்களுக்கு பிறகு படைபலத்தை பெருக்கிகொண்ட ஷேர் கான் வங்காளத்தை நோக்கி படையெடுத்தார். அங்கு நடந்த போரில் கியாசுதீனை வீழ்த்திய ஷேர் கானின் படை ஆக்ராவை நோக்கி நகர்ந்தது. 

இதை அறிந்த ஹுமாயூன், ஆக்ராவை நோக்கி படைதிரட்டிகொண்டு வந்து ஆக்ராவின் பகதூருக்கு உதவி புரிந்தார். ஹுமாயூனின் படைக்கு முன்  தாக்கு பிடிக்கமுடியாமல் ஷேர் ஷாஹ்வின் படை பின்வாங்கியது. அனால் சில மாதங்களில் பகதூர் மற்றொரு போரில் போர்டுகீசியாரால் கொல்லப்பட்டார். 

ஆக்ராவை கப்பர்ற்ற முடிந்தாலும் ஷேர் ஷாஹ் மற்றும் அவரது புதல்வரின் படைகள் பல்வேறு கிராமங்களை தாக்கின. இதில் காவூர் எனும் கிராமம் அந்த பகுதியின் முக்கிய தானிய வலமாக இருந்தது. இந்த கிராமம் ஷேர் ஷாஹ் சூரியாள் சூரையடபட்டு தானிய  பற்றாக்குறை ஏற்பட்டது. எனினும் ஹுமாயுன் சற்று தாமதமாக அங்கு வந்து ஷேர் ஷஹ்வின் படைகளை பின்வாங்க செய்தார். கிழக்கு நோக்கி பின்வாங்கிய ஷேர் ஷாஹ் தக்க தருணத்துக்காக காத்திருந்தார். 

இதற்கிடையே ஹுமயூனுக்கு பக்கபலமாக இருந்த அவரது 19  வயது சகோதரர் ஹிண்டல் தன்னை மன்னராக பாவித்து கொண்டு போர்க்கொடி தூக்கினர். சமாதனம் செய்ய ஹூமாயூன் அனுப்பிய தூதரையும் ஹிண்டல் கொன்றுவிட்டார். 

இதனை அறிந்த ஷேர் கான் மேலும் படையை சீரமைத்து ஓராண்டு கழித்து மீண்டும் ஹுமாயுனுடன் மோதினார். அப்போது ஹுமாயூனின் இரண்டாவது சகோதரர் தனது படைகளுடன் ஹுமயூனுக்கு உதவவந்தர். ஆனால் அவரது உதவியும் உள்நோக்கம் கொண்டதாக இருந்தது. சரிந்துகொண்டிருக்கும் முகலாய பேரரசில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கருதிய கம்ரான் தனது சகோதரர் ஹிண்டளுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். ஷேர் கானிடமிருந்து முகலாய அரசை கைபற்றிய பின்பு ஹுமாயூனை கொன்று ராஜ்யத்தை தங்களுக்குள் பிரித்துகொல்வது  என்பதே அது. 

இம்முறை சௌசா என்ற இடத்தில கடுமையாக நடந்த போரில் இருவரது படைகளும் கடும் போரிட்டன. நீண்ட நாட்கள் சரிசமமாக நடந்த இந்த போரில் இருவருக்கும் வெற்றி கிடைக்கததால் ஹுமாயூனும் ஷேர் காணும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். இதன் படி வங்காளம்  மற்றும் பீகாரை ஷேர் ஷாஹ் ஆழலாம். அனால் அவை ஹுமாயூனின் அதிகார வட்டத்துக்குள் உட்பட்டதாக இருக்கும். 

இடையூறு அகன்றதை எண்ணி பெருமூச்சு விட்ட ஹுமாயூன் தனது படைகளை தளர்த்தினார். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொள்ளாமல் அவரது படை கோட்டைக்குள் திரும்பியது. ஹுமாயூன் படையின் பலவீனத்தை கண்ட ஷேர் ஷாஹ் தனது உடன்பாட்டை மீறினார். அன்று இரவே முகலாயர் படைகள் தங்கியிருந்த கூடாரங்களை முற்றுகை இட்டார். பெரும்பாலான படை வீரர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்களை கொன்று குவிப்பது ஷேர் ஷாஹ்வின் படைக்கு மிகவும் எளிதாக இருந்தது. இதனை சற்றும் எதிர்பாரத ஹுமாயூன் கங்கை ஆற்றில் நீந்தி சென்று டில்லியை விட்டு தப்பி ஓடினார். 

ஷேர் கான் டில்லியில் சுல்தான் ஆனார். சூரி சாம்ராஜ்யம் உதயமானது. 

இவரது ஆட்சி காலத்தில்  டில்லி ஒரு ஸ்திரமான ஆட்சியை கண்டது. இவரது ஆட்சி திறமையை கண்ட பெர்சிய மற்றும் துரான் மன்னர்கள் ஆச்சர்யமும் இந்தியாவை காணும் ஆவலும் உற்றனர். இவர் ஏற்படுத்திய ஆட்சிமுறை கையேடுகளை தன்னுடைய 50 ஆண்டு ஆட்சிகாலத்தில் மாமன்னர் அக்பர் பயன்படுத்தியதாக தகவல்கள் உண்டு. 


ஷேர் ஷா சூரியின் கல்லறை 


அனால் இவரது ஆட்சி 5 ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது. 1945  ஆம் ஆண்டு  கலின்ஜார்  கோட்டையை கைப்பற்ற ராஜபுதிரர்களோடு நடந்த போரின்போது  ஒரு வெடிமருந்து விபத்தில் ஷேர் கான் உயிரிழந்தார். 

பீகாரில் சசரம் என்ற இடத்தில இவரது பிரம்மாண்ட கல்லறை அமைந்துள்ளது. இன்றளவும் அது ஒரு சிறந்த சுற்றுலா மையமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.


இஸ்லாம் ஷேர் ஷா (1545 - 1554)

ஷேர் கான் உருவாக்கிய சூரி சம்ரயத்தின் அடுத்த மன்னராக அவரது மகன் இஸ்லாம் ஷேர் ஷா முடிசூடினார். இவரது தந்தையின் திடீர் மரணத்தை அடுத்து சூரி சாம்ராஜ்யத்தின் அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்து ஜலால் கான் என்ற பெயர் கொண்ட இஸ்லாம் ஷேர் ஷாவை மன்னராக தேர்ந்தெடுத்தனர். ஆனால்  இவரது அண்ணன் அதில் கான் என்பவரே பட்டத்திற்கு உரியவர். இதனால் அதில் கான் எப்போது வேண்டுமானாலும் தன்னை தாக்கக்கூடும் என்று இஸ்லாம் ஷேர் ஷா எண்ணினார். அதனால் முடிசூடியதும் முதல் காரியமாக தனது அண்ணனை தேடி சிறைபிடிக்க உத்தரவிட்டார். 

ஆனால் அதில் கான் அங்கிருத்து தப்பி தனக்கென ஒரு ராணுவத்தை உருவாக்கினார். அந்த ராணுவம் இஸ்லாம் கான் ஆக்ராவில் இருந்தபோது அவரை தாக்கியது. அங்கு நடந்த யுத்தத்தில் இஸ்லாம் வெற்றி பெற்று அதில் கான் தப்பி ஓடினார். ஓடிய அதில் கான் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்லாம் கான் டில்லி சுல்தானாக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஹுமாயுன் ஒரே ஒருமுறை அவரை எதிர்த்து படையெடுத்து வந்தார். அனால் அந்த படையெடுப்பும் தோல்வியில் முடிந்தது. 

தனது தந்தை நிர்மாணித்த சூரி சாம்ராஜியத்தை நிலைநாட்டும் சிறந்த மன்னராக இஸ்லாம் செயல் பட்டர். இவரை கண்டு பகைவர்கள் போருக்கு வரவே அஞ்சினர். எனினும் எதிர் பாரத விதமாக 1554 ஆம் ஆண்டு இவர் மரணத்தை தழுவினார். 

இவருக்கு பின் இவரது மகன் பிருஸ் ஷா சூரி முடிசூடினார். அவருக்கு அப்பொழுது வெறும் 12 வயதே நிறைவடைந்திருந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட அவரது உறவினர் முகமத் ஷா அதில் இவரை கொன்று பட்டத்திற்கு வந்தார்.

இதன் பின்னர் சூரி சாம்ராஜ்யம் சின்னபின்னக சிதறியது. அடுத்த இரண்டே ஆண்டுகளில் நான்காக சிதறிய சூரி சாம்ராஜ்யம் 














No comments:

Post a Comment